deepamnews
இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(18) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

-இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.

-இவர்கள் பேசாலை,வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

-குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) மாலை தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

-இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு,16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

videodeepam

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு – 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை

videodeepam

பாண் மற்றும் பணிஸ் விலை குறையாது- இலங்கை பேக்கரி சங்கம் அறிவிப்பு

videodeepam