deepamnews
இலங்கை

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி – தொண்டமான் நகர் பகுதியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதை கண்டித்து இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வாயில் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 28ஆம் திகதி பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் கிளிநொச்சி காரியாலயம் உடைத்து பொருட்கள், ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன.

இதனைக் கண்டித்தும், களவில் ஈடுபடுபவர்கள் பாரபட்சம் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தின் முன்பாக கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பொது அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

videodeepam

இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா அனுமதி – தமிழக  அமைச்சர் தகவல்

videodeepam

பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்தது.

videodeepam