deepamnews
சர்வதேசம்

தென் ஆபிரிக்காவில் எரிபொருள் வாகனம் வெடித்ததால் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

தென் ஆபிரிக்காவில் எரிபொருள் வாகனம் ஒன்று வெடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள்  தெரிவித்தள்ளனர். 

போக்ஸ்பேர்க் நகரில், கடந்த சனிக்கிழமை திரவ பெற்றோலிய வாயு  ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று பாலமொன்றின் அடியில் சிக்கிக் கொண்டதால், வாயு கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதனால் 10 பேர் உடனடியாக கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என  தென் ஆபிரிக்க சுகாதார அமைச்சு நேற்று  தெரிவித்துள்ளது. காயமடைந்த பலர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. 

பாலத்தின் அடியில் சிக்கிய வாகனம் வெடிப்பதற்கு முன்னர் அதை பார்வையிடச் சென்றவர்களும் பலியானோரில் அடங்கியுள்ளனர். சுகாதார ஊழியர்கள் 11 பேரும் உயிரிழந்துள்ளனர் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்க தயாராகும் பிரித்தானியா!

videodeepam

முன்னாள் ஜனாதிபதியை விடுவிக்கக்கோரி போராட்டம் – பெருவில் அவசர நிலை பிரகடனம்

videodeepam

மன்னர் சார்லஸ்சின் முகம் கொண்ட முதல் நாணயத்தை வெளியிட்டது பிரித்தானிய அரசாங்கம்

videodeepam