deepamnews
சர்வதேசம்

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அங்குள்ள அரச கட்டடங்களில் உள்ள கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை மாலை வரை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

லொஸ் ஏஞ்சல் நகரின் தொலைவில் உள்ள மொன்டேரெய் பூங்காவிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் அங்குள்ளவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்.

குறித்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட 33வது பாரிய துப்பாக்கிச் சூடு இதுவாக கருதப்படுகின்றது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரை காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர், துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தன்னைத்தானே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதற்கான காரணிகள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஒருதலைப்பட்ச போர் நிறுத்த அறிவிப்பின் பின்னர் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக யுக்ரைன் குற்றச்சாட்டு

videodeepam

சகோதரர் வில்லியம் தம்மை தாக்கியதாக இளவரசர் ஹரி குற்றச்சாட்டு

videodeepam

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்திய புகைப்படப்பிடிப்பாளர்கள் –  விபத்தில் சிக்கினார் இளவரசர் ஹரி

videodeepam