deepamnews
சர்வதேசம்

நைஜீரியாவில் பண மதிப்பிழப்பு – வங்கிகளுக்கு தீ வைத்து மக்கள் போராட்டம்  

ஊழலை ஒழிக்கும் விதமாக நைஜீரிய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 200, 500 மற்றும் 1,000 நைரா (Naira) நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவித்தது.

அவற்றை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

எனினும், போதுமான அளவில் புதிய நைரா நாணயத்தாள்களை வங்கிகளால் புழக்கத்திற்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு வங்கிகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் பணப்புழக்கம் இல்லாமல் கடும் கொந்தளிப்பிற்கு ஆளான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பிரதான வீதிகளை மறித்தும், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களில் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.

ஆத்திரமடைந்த மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.ரி.எம். இயந்திரங்களை அடித்து நொறுக்கி சூறையாடி வருகின்றனர்.

சில இடங்களில் போராட்டக்காரர்கள் வங்கிகளுக்கு தீவைத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

நைஜீரியாவில் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

Related posts

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம் சிறையில் சரண் .

videodeepam

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் நால்வர் உயிரிழப்பு.

videodeepam

அமெரிக்க வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கம் – கைதுக்கு பின்னர் டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேச பேச்சு

videodeepam