deepamnews
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான படகிலிருந்த 104 மியன்மார் பிரஜைகள் மீட்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து மியன்மார் பிரஜைகள் 104 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரிலிருந்து இந்தோனேசியா நோக்கி, மியன்மார் பிரஜைகள் 104 பேரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகொன்று, இயந்திரக் கோளறு காரணமாக அனர்த்தத்துக்குள்ளானது.

குறித்த படகு யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பிற்குள் நேற்று  இரவு அனுமதியின்றி பிரவேசித்துள்ளதுடன் அதிலிருந்த மியன்மார் பிரஜைகள் அனைவரும் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அவர்கள் அனைவரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு துரித கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

யாழில் போராட்டம் நடத்திய போது கைதான நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேருக்கும் பிணை

videodeepam

மீண்டும் முகக்கவச பாவனை-சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

videodeepam

தேர்தலை இலக்காகக் கொண்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்.

videodeepam