deepamnews
இந்தியா

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் – இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

வைத்தியசாலைகளில் ஒட்சிசன்  இருப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்திய மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையின் போது   ஒட்சிசன் பற்றாக்குறையால் பொரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அனைத்து வைத்தியசாலைகளிலும்  ஒட்சிசன்     இருப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய- மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட நிலை மீண்டும் உருவாகக்கூடுடாது என்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அதானி மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது  ஒக்சிசன்    ஆலை தொடர்ந்து செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.  ஒட்சிசன் வைத்தியசாலை வளாகத்தில் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் உடனடியாக அதை நிறப்பும் பணிகள் நடைபெற வேண்டும்.

இதனை தொடர்ந்து மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும். ஒட்சிசன் சிலிண்டர்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டும்.    ஒட்சிசன்  உபகரண கருவிகள்  சுவாச கருவிகள் போன்றவை போதிய அளவில் இருப்தை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்கள் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைத்து கொள்ளலாம்.  ஒட்சிசன்   இருப்பு குறையும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்து அதை நிவர்த்தி செய்யும் பணியை மேற்கொள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

இஸ்லாமிய அமைப்புக்கு இந்திய அரசு தடை – தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

videodeepam

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு  கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வு! – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

videodeepam

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி

videodeepam