கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் மூழ்கிய தாய்லாந்து யுத்தக் கப்பலிலிருந்த மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
தாய்லாந்து யுத்தக்கப்பலான சுகோதாய், தாய்லாந்தன் தென்கிழக்கு கரையோரத்திலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூழ்கியது.
இக்கப்பலிருந்த 105 பேரில் 76 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஏற்கெனவே 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மேலும் பேரின் சடலங்கள் கடலிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளன.
17 பேரை இன்னும் காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.