deepamnews
இலங்கை

தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு  கிடையாது என்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.பத்திரண தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் களத்தில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.தேர்தலை பிற்போட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திரை மறைவில் இருந்து கொண்டு செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கக்கப்படுகின்றன.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொறுப்பாக்கப்பட்டுள்ளதால் அனைவரது கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறோம்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது.2022 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒருவருட காலம் பிற்போட்ட போது அதற்கு அரசியல் கட்சிகள் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சட்டத்தின் பிரகாரம் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மாடுகளை திருடிச் சென்றவர் கைது!

videodeepam

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு காலக்கெடு – சர்வதேச நாணய நிதியம் அறிக்கை

videodeepam

குளிரான காலநிலையால் வடக்கு – கிழக்கில் இதுவரை 1,660 கால்நடைகள் உயிரிழப்பு

videodeepam