deepamnews
இந்தியா

தூத்துக்குடி இலங்கைக்கு இடையில் கப்பல் சேவை – நிறுவனங்கள் விருப்பம்

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் சேவையை இயக்குவதற்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பல் சேவையை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனால் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை இயக்க வாய்ப்புள்ளது.

தற்போது மீண்டும் கொழும்பு, கொச்சி, சென்னை ஆகிய இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் சேவையை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நேற்று 7 மணி வரை 74.69 சதவீத வாக்குப்பதிவு

videodeepam

மகாராஷ்டிரா நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக உயர்வு!

videodeepam

உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை – அனர்த்தங்களின் சிக்கி 19 பேர் பலி!

videodeepam