deepamnews
இலங்கை

தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நீதிமன்றம் அல்லது பாராளுமன்றத்தை தவிர்ந்து ஏனைய விடயங்கள் குறித்து தாம் செயற்படுவதில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் நேற்றும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல், கட்சி அலுவலகங்களை ஸ்தாபித்தல், பிரதிநிதிகளை நியமித்தல் உள்ளிட்ட தேர்தலுடன் தொடர்புடைய செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 235,000 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக தகுதி பெற்றுள்ளனர்.

அதற்கமைய இந்தமுறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில்  ஒரு கோடி 68 இலட்சத்துக்கு அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மின்கட்டணம் செலுத்தாத மஹிந்த ராஜபக்ச –  நாமல் வழங்கியுள்ள பதில்

videodeepam

யாழில் இருந்து பெருமளவான ஆடுகளை கடத்தியவர் கைது!

videodeepam

10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கலப்பின சூரிய கிரகணம்

videodeepam