deepamnews
இலங்கை

நாட்டில் இன்றுமுதல் மீண்டும் மழை நிலைமை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாட்டின் வடக்கு, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Related posts

யாழில் பெண் போதைப் பொருள் வியாபாரி கைது

videodeepam

சாதாரணதரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: வினாத்தாள் விநியோகம் ஆரம்பம்

videodeepam

நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் பள்ளிகளிலும் உணவு விநியோகம் நிறுத்தம்..?

videodeepam