இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தை இலங்கையினால் பெற முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை சாதகமான முடிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.