deepamnews
இலங்கை

இலங்கைக்கு 10 வருட கால அவகாசம் வழங்குமாறு கடன் வழங்கும் நாடுகளிடம் பாரிஸ் கிளப் முன்மொழிவு

இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்கும் முன்னர், கடன் வழங்குநர் நாடுகளிடமிருந்து பெற்றக்கடன்களை தீர்ப்பதற்காக 10 வருட கால அவகாசம் மற்றும் 15 ஆண்டுகளுக்கு கடன் மறுசீரமைப்பு என்பவற்றை பாரிஸ் கிளப் நாடுகள் முன்மொழிந்துள்ளன.

இந்தநிலையில், இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கியுள்ள சீனா மற்றும் இந்தியான ஆகிய நாடுகளுடன் பாரீஸ் கிளப் நாடுகள் சம்பிரதாயமாக சந்திப்புக்களை நடத்தவுள்ளன.

அதேநேரம் இலங்கையும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் கடன் மறுசீரமைப்பு விடயங்களில் இணக்கம் எட்டப்பட்டாலும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள 2023 மார்ச்சில் நடைபெறவுள்ள அதன் நிறைவேற்றுக்குழு கூட்டத்துக்காக இலங்கை காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அடுத்த மார்ச் மாதம் வரையில் பொருளாதார பிரச்சினையை தீர்க்க இலங்கைக்கு இடைக்கால நிதி தேவைப்படும்.

இந்தநிலையில், இலங்கை பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னேற்றம் அடையும் முன்னர் மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Related posts

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று பணிப்பகிஷ்கரிப்பு – வைத்திய அதிகாரிகள் சங்கம்  தெரிவிப்பு

videodeepam

அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் – ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை

videodeepam

மட்டக்களப்பு வாவியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு – உயிரிழந்தவர் அடையாளம்  

videodeepam