deepamnews
இலங்கை

எஸ். ஜெய்சங்கர் இன்று முக்கிய பேச்சு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்கிறார்

இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் பல தரப்பினருடனும் முக்கிய சந்திப்புகளில் இன்று (20) ஈடுபடவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் இன்று (20) ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான 4 நாள் பயணத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்திய வெளிவிவகார அமைச்சர், வியாழக்கிழமை (19) கொழும்பை வந்தடைவார். கொழும்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இன்று (20)  வெள்ளிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார். இந்தச் சந்திப்புக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோருடன் தானும் பங்கெடுப்பார் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுக்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று (19) பிற்பகல் வந்தடைந்த அமைச்சர் ஜெயசங்கரை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் வரவேற்றனர்.

Related posts

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து   – புருனோ திவாகர கைது!

videodeepam

நாட்டின் அபிவிருத்திக்கு சீன அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் – சீன சர்வதேச ஒத்துழைப்பு முகாமை

videodeepam

ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா, சீனா, ஜப்பானுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு – செஹான் சேமசிங்க தெரிவிப்பு

videodeepam