deepamnews
இலங்கை

அமெரிக்காவின் Anchorage கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage (LPD-23) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 2023 ஆம் ஆண்டுக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக இந்த கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

இலங்கை கடற்படையின் SLNS Gajabahu மற்றும் SLNS Samudura ஆகிய கப்பல்கள் இந்த பயிற்சி நடவடிக்கையில் இணைந்துகொள்ளவுள்ளன.

208 மீற்றர் நீளமான  Anchorage கப்பலில் 477 அமெரிக்க கடற்படையினரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

பயிற்சி நடவடிக்கையின் பின்னர் 27 ஆம் திகதி இந்த கப்பல் நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.

Related posts

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவோம் –  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

videodeepam

இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது வழங்கியுள்ளது என்கிறார் அலி சப்ரி

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைகளை பிற்போடுவதற்கு அரசாங்கம்  சதி திட்டம் அரசாங்கம் – அனுரகுமார திசாநாயக்க குற்றச்சாட்டு

videodeepam