இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், சிற்றூந்தில் பயணிக்கும்போது இருக்கைப்பட்டி ( சீட் பெல்ட்) அணியாமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அந்நாட்டு காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரிய பிரதமர், இது தவறு என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தில் இருக்கைப்பட்டி அணியாமல் இருந்தால் அதே இடத்தில் 100 பவுண்ட்ஸூம், நீதிமன்றத்துக்கு சென்றால் அதிகபட்சமாக 500 பவுன்ட்ஸ் அபராதமும் விதிக்கப்படும்.
எனவே, இது தவறு என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு பிரதமர் சுனக் மன்னிப்புக் கோரியதாக அவரது பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு இங்கிலாந்தின் சுற்றுப்பயணத்தின் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.