deepamnews
இலங்கை

அரச சேவையாளர்களுக்கான வேதனத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி செலுத்த முடியும் – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவிப்பு

அரச சேவையாளர்களுக்கான வேதனத்தை எதிர்வரும் 25ஆம் திகதி வழமை போன்று செலுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச சேவையாளர்களுக்கான வேதனம் எதிர்வரும் 25ஆம் திகதி அல்லது அதற்கு மறுநாள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் இல்லாத அரச பணியாளர்களுக்கான வேதனம் எதிர்வரும் 25ஆம் திகதி செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது நிறைவேற்று அதிகாரம் இல்லாத சகல சேவையாளர்களுக்குமான வேதனத்தை செலுத்துவதற்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 7 பில்லியன் ரூபா பணமும் விரைவில் வழங்கப்படும்.

எனவே பாரிய பிரச்சினை ஏற்படாது.

இந்த விடயத்தில் தேவையற்ற விதத்தில் அச்சமடைய தேவையில்லை.

எனினும் சவால்களை அனைவரும் உரிய வகையில் புரிந்துக் கொள்ள வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts

மின் கட்டணத்தை திருத்தியமைக்கும் அமைச்சரவையின் சமீபத்திய முடிவு சட்டத்திற்கு எதிரானது என தெரிவிப்பு

videodeepam

மின் கட்டணம் 3 வீதம் குறைப்பு – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

நாட்டின் இரு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

videodeepam