உயர் தர பரீட்சைக் காலத்தில் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்காத அதிகாரிகளிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று விசாரணை நடத்தியது.
இதற்கமைய, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளரும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவும் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தனர்.
மேலும், நேற்று மாலை 04 மணியளவில் மின்சார அமைச்சின் செயலாளர், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் இரண்டு அரச வங்கிகளின் தலைவர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான அனுமதியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து ஆராய்வதற்காக மின்சார சபை மற்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் தேசிய சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.