deepamnews
இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இந்தியாவால் தடுக்கப்பட்டது – மிலிந்த மொரகொட

இந்தியா துரிதமாக செயற்பட்டிருக்காவிட்டால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

Times of India-விற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளித்து, அதற்கான உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கியமைக்காக இந்தியாவிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆதரவு இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துமெனவும் மிலிந்த மொரகொட நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா உதவியதை போன்று வேறெந்த நாட்டினாலும் இலங்கைக்கு உதவியிருக்க முடியாது எனவும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கடந்த ஒரு வருடத்திற்குள் மூன்று தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்தமை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதாகவும், புதிய அத்தியாயத்திற்கு வழிவகுப்பதாகவும் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் பொருளாதார மீளெழுச்சியின் ஆரம்பம் என தெரிவித்துள்ள மிலிந்த மொரகொட, கலாநிதி ஜெய்சங்கர் இலங்கையுடனான  ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக இலங்கைக்கு வருகை தந்ததாகவும் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியாவின் நிதி உத்தரவாதங்களை தனது விஜயத்தின் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கியதன் மூலம் இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கான வழியை தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் இரத்துச் செய்யப்படவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

videodeepam

ஒக்டோபர் மாதத்துக்குள் மின்சார சபையை மறுசீரமைக்க உத்தேசம் –  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தகவல்

videodeepam

கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு

videodeepam