deepamnews
இலங்கை

ஒக்டோபர் மாதத்துக்குள் மின்சார சபையை மறுசீரமைக்க உத்தேசம் –  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர் குழு அறிக்கை எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பட்டியலில் மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்ட குழு அறிக்கையை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையை எதிர்வரும் மே மாதம் முதல்வாரத்தில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பின் போது மனித வள முகாமைத்துவத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, உட்பட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் எவரது தொழிலுரிமைக்கும் பாதிப்பு ஏற்படாது. அரசாங்கத்துக்கு சுமையாக உள்ள நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்காவிட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் பற்றிக் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

videodeepam

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம்

videodeepam

மட்டக்களப்பில் காணாமல் போன 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு

videodeepam