deepamnews
இலங்கை

மன்னாரில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுப்பு.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு கைகளை சங்கிலியால் கட்டி ,வாய் மற்றும் மூக்குகளை கறுப்பு துணிகளால் மூடிய படி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக 75 ஆண்டாகியும் எமது அடிப்படை உரிமை நசுக்கப்படுகிறது,சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்,பெளத்த தேசிய வாதமும் சிங்கள இனவாதமுமே எம்மை அடிமைப்படுத்துகின்றன என எழுதப்பட்ட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்தின் இறுதியில் கைகளில் பதாகைகளையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவாறு போராட்டகாரர்கள் மன்னார் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஏப்ரல் 5 பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

videodeepam

சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் தொற்று தொடர்பில் இலங்கையிலும் எச்சரிக்கை

videodeepam

வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், எட்டுப்பேர் கைது

videodeepam