13ஆம் திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த மூவரும், ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து, அதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போது தாங்கள் அனைத்துக் கட்சி மாநாட்டில் பங்கேற்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விவாதத்தில் உரையற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இணங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, 13 ஆவது திருத்தம் தொடர்பில், ஜே.வி.பி தமது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.