deepamnews
சர்வதேசம்

குடியுரிமையை பெறுவதற்காக  அர்ஜென்டினாவுக்கு படையெடுக்கும் ரஷிய கர்ப்பிணிகள்

அர்ஜென்டினா வரும் ரஷிய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அர்ஜென்டினா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன. குறிப்பாக அர்ஜென்டினாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படுகிறது. மேலும் அந்த குழந்தையின் பெற்றோரும் விரைவாக குடியுரிமை பெற முடிகிறது.

இதனால் ரஷியாவை சேர்ந்த பெண்கள் பலரும் தங்களின் பிரசவ காலத்தில் அர்ஜென்டினாவுக்கு பயணம் செய்து, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சூழலில் சமீபத்திய மாதங்களில் அர்ஜென்டினா வரும் ரஷிய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அர்ஜென்டினா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷிய கர்ப்பிணிகள் அர்ஜென்டினா வந்துள்ளதாகவும், கடந்த வியாழக்கிழமை ஒரே விமானத்தில் 33 கர்ப்பிணிகள் வந்ததாகவும் அர்ஜென்டினாவின் குடியுரிமை அதிகாரிகள் கூறினர்.

Related posts

வட அயர்லாந்திற்கான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் – பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

videodeepam

30 நாடுகளில் கொலரா நோய்  பரவல் – உலக சுகாதார அமைப்பு  எச்சரிக்கை

videodeepam

ஜுன் மாதம் முதலாம் திகதியுடன் உக்ரைனை விட்டு வெளியேறும் ரஷ்யாவின் கூலிப்படை

videodeepam