deepamnews
இலங்கை

பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஜனாதிபதி – விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்துகிறார்.

ஐக்கிய தேசிய கட்சியை தஞ்சமடையச் செய்யும் நிலை பொதுஜன பெரமுனவுக்கு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கடுவெல பகுதியில் நேற்று  காலை இடம்பெற்ற சுதந்திர மக்கள் சபை கூட்டணியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் விமல் வீரவன்ச இவ்வாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திட்டமிட்ட வகையில் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும். தேர்தலை பிற்போடும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. மாறாக, தேர்தலை பிற்போடுவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்துகிறார்.

இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும். பஷில் ராஜபக்ஷவின் படுதோல்வியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 40 கோடி ரூபா செலவு செய்து 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட முடியுமாயின், ஏன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

10 மணி நேர மின்வெட்டு அமுலாகும் என்ற கருத்து உண்மைக்கு புறம்பானது – எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

videodeepam

நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

videodeepam

ஆசிரியர் இடமாற்றம் பிரிவை தாங்காது கதறி அழும் மாணவர்கள்.

videodeepam