ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக சிங்கள நடிகையும் காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன அறிவித்துள்ளார்.
பொலன்னறுவையில், சஜித் பிரேமதாசவின் கூட்டம் நேற்று இடம்பெற்ற மேடையில், தமிதா அபேரத்ன தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.
அரகலய போராட்டத்தின் நோக்கம் ராஜபக்ஷக்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதாகும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அந்த இலக்கை போராட்டம் அடைந்துள்ள நிலையில், இன்னும் சிலரை அகற்ற வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
காலி முகத்திடலில் நடந்த போராட்டத்தின்போது தமிதா அபேரத்ன, தீவிரமான செயற்பாட்டை கொண்டிருந்தநிலையில், போராட்டத்தின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.