deepamnews
இலங்கை

தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்கவேண்டும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

ஜனாதிபதி அரசியலமைப்பை பாதுகாப்பதாக இருந்தால் ஆரம்பமாக மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்கவேண்டும். அத்துடன் பாராளுமன்றத்துக்குள் ஒருசிலர் தெரிவித்ததற்காக தேர்தல் ஆணைக்குழுவை மாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்று ஜனாதிபதி உட்பட எவருக்கும் அரசியலமைப்பை மீறி செயற்படுவதற்கு உரிமை இல்லை. அதனால் தேர்தலை நிறுத்தி அரசியல் கோழைத்தனத்துக்கு தயாராக வேண்டாம் என ஜனாதிபதிக்கு தெரிவிக்கிறோம்.

வாக்குரிமை என்பது அரசியலமைப்பினூடாக மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமையாகும். அதில் யாருக்கும் கைவைக்க முடியாது. நிறைவேற்று ஜனாதிபதிக்கும் அதில் கைவைக்க முடியாது.

அத்துடன் நாட்டில் தேர்தல் ஒன்று இல்லை என யானை, மொட்டு கூட்டணி அரசாங்கத்தின் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

அவர் இந்த நாட்டு ஜனாதிபதி அல்ல. அவர் செவ்வாய் கிரகத்தின் ஜனாதிபதி. அவர் அரசியலமைப்பை பாதுகாப்பதாக இருந்தால் அரசியலமைப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்களிக்கும் உரிமையை பாதுகாப்பதற்காக தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்கவேண்டும்.

தேர்தலுக்கு அச்சப்படாமல் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு எதனையும் செய்யலாம் என ஜனாதிபதி நினைத்தால் அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

நெடுங்குடியிருப்பொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிப்பு – பொது மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை

videodeepam

கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அரச மன்னிப்பு

videodeepam

பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் ஆதரவை கோருவோம் – விக்னேஸ்வரன்

videodeepam