deepamnews
இந்தியா

நீட் தேர்வு விலக்கு குறித்து கோரிக்கை வைத்தேன் – பிரதமர் மோடியை சந்தித்த உதயநிதி தகவல்

நீட் தேர்வு விலக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அது தொடர்பாக பிரதமர் சில விளக்கங்களை அளித்தார். இந்த விவகாரத்தில் திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பிரதமரிடம் கூறியதாக, தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கடந்த முறை சென்னை வந்த பிரதமர், அடுத்த முறை டெல்லி வரும்போது தன்னை பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டோம், உடனே கொடுக்கப்பட்டது. பிரதமரைச் சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை. தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோல் பிரதமரின் தாயார் மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன்.

நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அப்போது அது தொடர்பாக அவர் சில விளக்கங்களை அளித்தார். தமிழ்நாட்டு மக்களின் மனநிலை இதுதான், அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கூறினேன். அதேபோல், திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று கூறினேன்.
பிரதமர் உடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் – பா.ஜ.க முக்கியஸ்தர்கள் வலியுறுத்தல்

videodeepam

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

videodeepam

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – மத்திய இணை அமைச்சர் முரளிதரன் உறுதி.

videodeepam