யுக்ரைனின் குப்பியன்ஸ்க் பிரதேசத்தில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்பினர் அங்கிருந்து கடந்த வருடத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ரஷ்ய துருப்பினரின் எறிகணை மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புலனாய்வு தகவலிற்கு இணங்கவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை வெளியேறும் படி கோரப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் முன்னர் கைப்பற்றப்பட்ட இந்தப் பிரதேசம், யுக்ரைனின் தாக்குதலால் ரஷ்யா பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்தநிலையில், பல மாதங்களுக்கு பின்னர் ரஷ்யா மீண்டும் அந்தப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் தாக்குதலை முனைப்புடன் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவுடன் இணைந்து செயல்படும் யுக்ரைனில் உள்ள ஆயுத குழுக்கள் தாம் ஏற்கனவே குறிப்பிட்ட பிரதேசத்தை அண்மித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.