deepamnews
சர்வதேசம்

உக்ரைனின் 8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!

கருங்கடல் பகுதியில் உக்ரைனின் 8 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதுடன் அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் 18 மாதங்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் சமீப காலமாக இரு தரப்பினருக்குமிடையில் ட்ரோன் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

அதன்படி ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இதனை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இதேவேளை, கிரீமியா அருகே உள்ள கருங்கடல் பகுதியில் உக்ரைனின் 8 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்று  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கெர்சன் நகரில் மீண்டும் பறந்த உக்ரைன் தேசியக்கொடி – பொதுமக்கள் ஆரவாரம்

videodeepam

கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் தீப்பரவல் – 3 பேரை காணவில்லை

videodeepam

சிலியில் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம்

videodeepam