deepamnews
இலங்கை

யாழ். மாநகர சபையின் தமிழரசுக்கட்சியின் சார்பான வேட்பாளர் சொலமன் சிறில்?

இன்று காலையில் தமிழ் அரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், பெரும்பாலானோர் சொலமன் சிறில் அவர்களது பெயரை முன்மொழிந்தனர். அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சொலமன் சிறில் அவர்களுக்கான ஆதரவை திரட்டிய பின்னர் அவரை முதல்வர் வேட்பாளராக களமிறக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 19 ஆம் திகதி உள்ளூராட்சிசபைகள் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – நாலக கொடஹேவா உறுதி

videodeepam

ஜனாதிபதி இழுத்தடிப்பு – அதிருப்தியில் மொட்டு கட்சி?

videodeepam

வேகமாக பரவும் இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் – பொதுமக்களிடம் கோரிக்கை

videodeepam