deepamnews
இலங்கை

பெற்றோலிய விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

கனிம எண்ணெய் விநியோகத்தை விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு தமது அமைப்பு தயாராக இருப்பதாக சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் இங்கு தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது அமைப்பு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள், ஹம்பாந்தோட்டையில் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய ஆரம்ப எரிசக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான முழு முதலீட்டையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதேவேளை, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பான யோசனையையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட போவதில்லை –  ஜனாதிபதி அறிவிப்பு

videodeepam

22 ஆவது திருத்தத்தினால் பயனில்லை. – சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam

நுளம்பு வலை இறுகியதால் புத்தளத்தில் சிறுவன் பலி!

videodeepam