உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்ட்டுள்ளது.
மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு சரிந்துள்ளது. இந்தியாவில் தீங்கு விளைவிக்கக்கூடிய PM 2.5 என்ற காற்று மாசு நுண்துகள் செறிவு 53.3 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக குறைந்திருந்தாலும்,
உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள பாதுகாப்பு வரம்பை விட 10 மடங்கு அதிகமாகும். இந்த பட்டியலில் 7,300க்கும் மேற்பட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், இந்திய நகரங்கள் முன்னிலையில் உள்ளன. மிகவும் மாசுபட்ட முதல் 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
டாப்-10 நகரங்களில் 6 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிக மாசுபட்ட நகரங்களில் முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹோடான் நகரங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிவாடி, டெல்லி ஆகிய நகரங்கள் உள்ளன.