உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், அவற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க திட்டமிடப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க அமைச்சருக்கு அதிகாரமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் திருட்டுத்தனமான பாதையில் மீண்டும் செல்ல தயாராக வேண்டாம் என அரசாங்கத்திற்கு ஜே.சி. அலவத்துவல அறிவுறுத்தினார்.