deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சட்டத்தரணி திரு.நிமல் ஜி புஞ்சிஹேவா, தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட தேதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த திகதியில் தபால் மூல வாக்குகளை வழங்க முடியாது என அரசாங்க ஊடகங்கள் தெரிவித்திருப்பதால், அந்தந்த திகதிகளில் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருமென நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு திறைசேரி செயலாளரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி திருமதி கங்கானி லியனகே தெரிவித்தார்.

இது தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியை வழங்கும் அரசாங்க அச்சகமானது திறைசேரி செயலாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கைகளை பல தடவைகள் முன்வைத்திருந்தது.

இது தொடர்பான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அந்த கோரிக்கைகள் அனைத்தும் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை திறைசேரி செயலாளர் தெரிவித்தார்.

இது தவிர தேர்தல் தொடர்பான அச்சடிக்கும் பணியின் போது தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் அதற்காக அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்படுவதற்கு 03 நாட்களுக்கு முன்னர் அறிவிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் அரச அச்சகத்திற்கு அறிவித்துள்ளார். .

இது தொடர்பான அறிவித்தல் எழுத்துமூலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி திருமதி கங்கானி லியனகே தெரிவித்தார்.

Related posts

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி  இன்று சந்திப்பு 

videodeepam

ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் – சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

videodeepam

பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியீடு

videodeepam