deepamnews
இலங்கை

மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது தேர்தல் – இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று  தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆவது நினைவேந்தல்

videodeepam

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்!

videodeepam

மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் எண்ணமில்லை – இலங்கை மின்சார சபை அறிவிப்பு

videodeepam