deepamnews
இலங்கை

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆவது நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆவது நினைவேந்தல் நேற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 10ஆம் திகதி இந்தியப் படையினருக்கு எதிரான போரின் போது, கோப்பாயில் இடம்பெற்ற மோதலில், 2ஆம் லெப்டினன்ட் மாலதி சாவைத் தழுவினார்.

கோப்பாய், கிரெசர் வீதியில் அவர் சாவைத் தழுவிய,   இடத்தில் நேற்று மாலை 6 மணியளவில், தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டு பொது கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டு பொது கட்டமைப்பு குழுவைச் சேர்ந்த வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் இந்த நினைவேந்தலில் பங்கேற்றனர்.

அதேவேளை, விடுதலை போராட்டத்தில் வித்தாகிய  முதலாவது பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண அமைச்சர் குருகுலராஜா, பிரதேசசபை உறுப்பினர்கள் ஜீவராசா மற்றும் ஜெயசித்திரா வட்டார அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் தமிழ் தேசியப்பற்றாளர்கள் மற்றும் எம்மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

மின்கட்டணம் குறைகிறது  – மின்சார சபை முன்வைத்துள்ள புதிய  யோசனைகள்!

videodeepam

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

videodeepam

தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி!

videodeepam