deepamnews
இலங்கை

கொழும்பு வந்தார் எரிக் சொல்ஹெய்ம் – இன்று ரணிலைச் சந்திக்கிறார்

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

சென்னையில் இருந்து எயார் இந்தியா விமானம் மூலமாக எரிக் சொல்ஹெய்ம், நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

2001 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்த போது, விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்பாடு மற்றும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களுக்கான ஏற்பாட்டாளராக எரிக் சொல்ஹெய்ட்ட் விளங்கினார்.

அதற்காக அவர், இலங்கைக்கான விசேட தூதுவராக நோர்வே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், நோர்வேயின் அமைச்சராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம், அரசியலில் இருந்து விலகி, ஐ.நா சுற்றாடல் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரிலேயே எரிக் சொல்ஹெய்ம்,  கொழும்பு வந்துள்ளார்.

அவர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச்  சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

நாளை வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரான்சின் தலைநகர் பாரிஸின் வீதியில் தீலபனின் திருவுருவம்.

videodeepam

தொழிற்சங்க ஒன்றியத்தினரை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி – வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்    

videodeepam

கோதுமை மாவின் விலை மேலும் குறையும்

videodeepam