deepamnews
இலங்கை

கடல் அட்டைப் பண்ணைகளால் யாழ்ப்பாண மக்கள் கடல் உணவு கிடைக்காத நிலைக்கு

யாழ். குடாக்கடலில் அதிகரித்து வரும் கடல் அட்டைப் பண்ணைகளால் யாழ்ப்பாண மக்கள் தமக்குத் தேவையான கடல் உணவைப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

“யாழ். குடாக்கடலின் பரப்புப் பகுதிகளில் மீன் இனங்கள்  இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் பகுதிகளாக உள்ளது.

இந்நிலையில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பதற்காக குறித்த பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதுடன், பல பகுதிகளில் அட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடல் சும்மா இருக்கிறது, அதில் அட்டைப் பண்ணை அமைத்தால் என்ன என சிலர் நினைக்கிறார்கள்.

யாழ். குடாக்கடல் பரப்பில்,  இயற்கையாகவே இறால் உற்பத்தி இடம்பெறுவதோடு மீன்கள் உற்பத்தியாகி ஆழ்கடலுக்குச் செல்லும் பகுதியாகவும் காணப்படுகிறது.

இயற்கையாகவே இறால் உற்பத்தி இடம்பெறும் பகுதியாக தீவகக் கடல் பரப்பு காணப்பட நிலையில், செயற்கையாக இறால் பண்ணைகளை அமைப்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள்.

எமது வளமான கடற்பகுதியில் முறையற்ற விதத்தில் அட்டை பண்ணைகள் அமைத்து எமது கடல் வளத்தையே நாசப்படுத்தும் செயற்பாடு மிகவும் வேகமாக இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் அதிகரிக்குமானால் யாழ் மாவட்ட மக்களுக்கு தேவையான கடல் உணவை சில வருடங்களில் பின் பெற முடியாத துப்பாக்கிய நிலை ஏற்படும்.

ஏனெனில் குடாக் கடல் பரப்பை இலக்கு வைத்து அட்டைப் பண்ணைகள் பெருகுவதால் மீன்கள் உற்பத்தியாகும் இடங்கள் தடுக்கப்படுவதோடு நீரோட்டங்களும் தடுக்கப்படுகிறது.

நாங்கள் அட்டைப் பண்ணைக்கு எதிரானவர்கள் அல்ல பண்ணை அமைக்கும் போது கடலை மாசு படுத்தாமலும் மீன் இனங்கள் பெருகக்கூடிய பகுதிகளை விடுத்து அட்டை பண்ணைகளை அமைக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை..

videodeepam

இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல்

videodeepam

மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுப்பு!

videodeepam