deepamnews
இலங்கை

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை நாணய நிதியம் விதிக்கவேண்டும் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிபந்தனையையும் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் முதல் தவணை நிதி கிடைத்துள்ளமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் அறிவித்ததன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு விடயமும் உள்ளடக்கப்படவேண்டும் என்றும்  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாணய நிதியத்தால் வழங்கப்படும் நிதி உதவி அன்றாடம் உணவுக்கு கஷ்டப்படும் ஏழை மக்களை சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தல் 

videodeepam

கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்கிறது சர்வதேச நாணய நிதியம்

videodeepam

பாடசாலை மாணவர்களுக்காக 1,000 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கிய சீனா

videodeepam