deepamnews
இந்தியா

மரண தண்டனை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராயுமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

தூக்கு தண்டனை கொடூரமானதா என்பது குறித்து விவாதம் நடத்துமாறு மத்திய அரசுக்கு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான வழி ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து தகவல் சேகரிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்ற கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் டி. வை. சந்திரசூட் தலைமையிலான ஆயத்தால் விசாரிக்கப்பட்டது.

அப்போது சிரேஷ்ட சட்டத்தரணி ரிஷி மல்ஹோத்ரா, சட்ட ஆணையத்தின் அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அதில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனையானது மிகவும் கொடூரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து பிரதம நீதியரசர், நாட்டில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை என்பது தூக்கு தண்டனையாகும் இது மிகவும் கொடூரமானதா என்பது தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்றார்.

மேலும் மரண தண்டனையை, குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் உள்ளனவா என்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கவேண்டும்.

இந்த விவரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல்செய்ய சட்டமா அதிபர் ஆர்.வெங்கட்ரமணிக்கு பிரதம நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இந்திய பிரதமர் மோடியின் வீட்டின் மேல் ஆளில்லா விமானம் பறந்தததால் பரபரப்பு.

videodeepam

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி பேச்சு!

videodeepam

கடல் கடந்து கரம் பிடித்த காதலி. கடலூரில் திருமணம்

videodeepam