deepamnews
சர்வதேசம்

தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உகாண்டாவில் புதிய சட்டம்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தன்பால் ஈர்ப்பாளர்கள்  தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ள அதேவேளையில், சில நாடுகளில் எதிரான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தற்பால் ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி, தற்பால் ஈர்ப்பாளர்கள் என அடையாளம் காணப்படுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், கடும் விதி மீறல்களில் ஈடுபடும் தற்பால் ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஏற்னவே உகாண்டா உட்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தற்பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உகாண்டாவில் புதிய நடவடிக்கையாக சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்பால் உறவை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகியவற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related posts

துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டில்  184 பேர் கைது – 600 பேரிடம் விசாரணை

videodeepam

ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையில் கடும் மோதல் – 41 பெண்கள் பலி..!

videodeepam

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம் சிறையில் சரண் .

videodeepam