நோபல் பரிசை வெற்றிக்கொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களை ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழ் டயஸ்போரா என்ற செய்தித்தளத்தின் ஆசிரியர் தமது பக்கத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு வரலாற்று ரீதியாக உள்நாட்டு மோதல்களைத் தீர்ப்பதற்கும் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கும் பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டுகளில் நெல்சன் மண்டேலா, டெஸ்மண்ட் டுட்டு, போன்றோரும் அடங்குகின்றனர்.
முன்னதாக 2023ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதான பரிசுக்காக நரேந்திர மோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கூறப்பட்டு வந்தது
எனினும் இந்த செய்தி பொய்யானது என்று நோர்வேயின் நோபல் பரிசுக்குழு தெரிவித்திருந்தது.
இதனையடுத்தே தமிழ் டயஸ்போரா தமது கருத்தை வெளியிட்டுள்ளது.
காணாமல் போன தமிழர்களின் தாய்மார்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழர் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளிடம் உதவி கேட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொது வாக்கெடுப்பு மற்றும் அண்டை நாடான இந்தியாவிடம் இருந்தும் இன்னும் தீவிரமான பங்கை அவர்கள் கோருகி;ன்றனர்.
எனினும் நரேந்திர மோடி தமிழர் தாயகத்தில் நடந்து வரும் இனப்படுகொலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை.
அவர்களின் நிலைமையை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை.’
1987 இன் இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் வரும் 13வது திருத்தத்திற்கு அமைவாக இலங்கையில் கூட்டமைப்பைக் கொண்டுவர உதவுவதாக 2019 இல் மோடி நிறைவேற்றப்படாத வாக்குறுதி ஒன்றை வழங்கினார். அது நிறைவேற்றப்படவில்லை.
இந்தநிலையில் மோடிக்கு அமைதிப் பரிசு கிடைக்க வேண்டுமானால், முதலில் காணாமல் போன தமிழர்களைக் கண்டறியவும், தமிழ் அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படும் அனைவரையும் விடுவிக்கவேண்டும்.
இனப்படுகொலை, கற்பழிப்பு, கடத்தல், இராணுவ ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, இந்து கோயில்களின் இடிப்பு போன்றவற்றைத் தடுக்க நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர் பகுதிகளில் பௌத்த விஹாரைகள் கட்டுதல், சிங்கள புலனாய்வு முகவர்களால் தமிழர்களை துன்புறுத்துதல் மற்றும் தமிழர்களின் வீடுகள் மற்றும் பண்ணைகளை அழித்தல் போன்ற செயல்களை அவர் தடுக்கவேண்டும்.
அதுவரையில் பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியற்றவர்.
இந்த கௌரவத்தை அவர் பெற வேண்டும். ஆனால் இலங்கையில் ஒரு உண்மையான மற்றும் நிலையான அமைதிக்கான காரணத்திற்காக அவர் இன்னும் நிறைய செய்ய வேண்டும். நோபல் பரிசை வெல்ல மோடி தமிழர்களை ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர்கள் விடுவிக்க வேண்டும் என்றும் தமிழ் டயஸ்போரா என்ற செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.