இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.