deepamnews
இந்தியா

அதிமுகவின் 2,646 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பேர் தென்னரசுக்கு ஆதரவு

அதிமுகவில் உளள 2,646 பொதுக் குழு உறுப்பினர்களில் 2,501 பேர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்று  தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இவர்கள்,” உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளோம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சுற்றறிக்கை மூலம் பொதுக் குழு கூட்டப்பட்டது. பொதுக் குழுவில் மொத்தம் 2,665 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 15 பேர் இறந்துவிட்டனர். 2 பேரின் பொறுப்பு காலாவதி ஆகிவிட்டது. 2 பேர் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டனர். மீதம் உள்ள 2,646 பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தச் சுற்றறிக்கையில் தென்னரசுவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்றும், வேறு ஒருவரின் பெயரை தெரிவிக்க விருப்பினால் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2501 பேர் தென்னரசுவை வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று வாக்களித்து உள்ளனர்.

தென்னரசுக்கு எதிராக ஒரு வாக்கு கூட வரவில்லை. ஆனால், 145 உறுப்பினர்கள் வாக்குகளை பதிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் ஆணையத்தில் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி ஆவண செய்வதாக தெரிவித்துள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

நீரை காட்டிலும் இரத்தம் பருமனானது – இலங்கை, இந்திய உறவு குறித்து எஸ்.ஜெய்சங்கர் கருத்து  

videodeepam

கொரோனா முன்னெச்சரிக்கை – மீண்டும் முகக்கவசத்தை அணியுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்

videodeepam

ஜூன் மாதத்தில் இந்தியாவையும் பொருளாதார பெருமந்தம் தாக்கும் – முதன்முறையாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு

videodeepam