deepamnews
இலங்கை

பான் கீ மூன், மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை நினைவுபடுத்த வேண்டும் – மனோ கணேசன் தெரிவிப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கட்டாயமாக சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை நினைவுபடுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றினூடாக வலியுறுத்தியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அதனை மென்மேலும் மேம்படுத்துவற்கு 13 ப்ளஸ்ஸூக்கு உடன்படுவதாகவும் பான் கீ மூன் தமக்கு உறுதியளித்ததை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் இதன்போது நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த உறுதிமொழியை இன்றைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சில பெளத்த பிக்குகளுக்கு பான் கீ மூன் நினைவுபடுத்த வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகத்தை சந்திக்கவுள்ள பிரமுகர்களின் நிகழ்ச்சிநிரலில் தாம் இல்லையெனவும் அவரை சந்திக்கும் பட்சத்தில் அதனை நேரடியாக கூறுவதற்கு தயாராகவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒடிசா தொடருந்து விபத்துக்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்

videodeepam

காணாமல் போன நெல் தொகையின் பெறுமதி 65 மில்லியன் ரூபா: நெல் சந்தைப்படுத்தல் சபை.

videodeepam

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயது 60 – அதிவிசேட வர்த்தமானி வெளியானது

videodeepam