deepamnews
இலங்கை

இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் உதவி – உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன்

மேலும் இரு வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கைக்கு 07 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தே இந்த கடன் தொகை கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான நீண்ட கால கடன் வசதிக்கு அனுமதி கிடைத்தன் பின்னர் மீண்டும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சட்டரீதியாக விற்பனை செய்யப்படும் மதுபான வகைகள் மற்றும் சிகரெட் விற்பனை 30 முதல் 40 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தல்

videodeepam

கனேடிய அரசின் தடையை முற்போக்கு நாடுகளும் பின்பற்ற வேண்டும் – உலகத் தமிழர் பேரவை  அறிக்கை

videodeepam

யாழில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி

videodeepam