deepamnews
சர்வதேசம்

சிலியில் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம்

பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்புளுயன்சா தொற்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட 53 வயதான நபர் ஒருவரே பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தொற்றுக்குள்ளான நபரின் உடல் நிலை சீராக காணப்படுவதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபருக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட விதம் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

H5N1 வகையை சேர்ந்த பறவைக் காய்ச்சல் சிலியில் காட்டு விலங்குகளிடையே கடந்த ஆண்டில் பதிவாகியிருந்தது.

பறவைகள் அல்லது கடல் பாலூட்டிகளிடமிருந்து இந்த தொற்று மனிதர்களிடையே பரவக்கூடும் என சிலியின் சுகாதார அதிகாரிகள் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், பறவைக் காய்ச்சலானது மனிதரில் இருந்து இன்னுமொரு மனிதருக்கு பரவுமா என்பது தொடர்பில்  இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Related posts

பாரிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, அறுவர் காயம்

videodeepam

பாகிஸ்தான் சிற்றூர்தி விபத்தில் 11 குழந்தைகள் உள்லிட்ட  20 பேர் பலி

videodeepam

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் யுக்ரைனுக்கு சென்றுள்ளார்.

videodeepam