deepamnews
இலங்கை

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலை குறைப்பு

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.
இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 200 ரூபாவாகவும், 340 ரூபாவாக இருந்த பருப்பு கிலோ ஒன்றின் விலை தற்போது 310 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாவாக காணப்படுவதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம்  – சந்திரிகா

videodeepam

பொலிஸ் அதிகாரிகளை போல் செயற்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கைது.

videodeepam

2024 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ரணில், பிரதமர் பஷில்; அத்துரலியே ரத்ன தேரர் தகவல்

videodeepam