deepamnews
இலங்கை

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம்  – சந்திரிகா

தேர்தல் முறைமை திருத்தம் என்ற தர்க்கத்தை முன்வைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து நீதிமன்றத்தை நாடுவோம்.  தற்போதைய நிலையில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கூட்டணி காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறையில் பல திருத்தங்களை முன்வைப்பதாக ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். பிரதேச  மற்றும் நகர சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதாகவும், பிரதேச சபை தலைவர்களின் அதிகாரங்களை குழுக்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். இது சிறந்த ஏமாற்று நாடகமாகும்.

தேர்தல் முறைமை திருத்தத்தின் ஊடாக எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதமளவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலுக்கும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தான் மாகாண சபைகளின் நிர்வாகம் இயங்குகிறது. மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் சர்வஜன வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்.

தேர்தல் முறைமை என்ற தர்க்கத்தை முன்வைத்து மாகாண சபை தேர்தலை கால வரையறையின்றி பிற்போட்டுள்ளதை போன்று உள்ளூராட்சி மன்றம் மற்றும் பொதுத்தேர்தலையும் பிற்போட ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். மக்களாணை இல்லாத ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போட இடமளிக்க முடியாது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வோம். நாட்டு மக்கள் மத்தியில் செல்வதற்கு அரசாங்கம் அச்சம் கொள்கிறது. தற்போதைய நிலையில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும், ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் முறைமை மாற்றத்தை கோரினார்கள். ஆனால், தற்போது ஜனாதிபதி பதவியில் மாத்திரம் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கடந்த அரசாங்கமே அதிகாரத்தில் உள்ளது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியபோது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் சட்டமூல வரைபு பாராளுமன்ற விவாதத்துக்கு சமர்ப்பிக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆளுகிறாரா அல்லது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிறிதொருவர் ஆளுகிறாரா?

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் இரட்டை குடியுரிமை உடையவர் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும், பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவும் தகுதியற்றவர் என்ற ஏற்பாடு காணப்படும் வரை 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற ஆளும் தரப்பினர் இடமளிக்கமாட்டார்கள் என்றார்.

Related posts

பயங்கரவாத புலனாய்வு பணிப்பாளருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை திர்மானிக்க இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam

கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..! – சஜித் தெரிவிப்பு

videodeepam